கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான காபி மில்க் ஷேக் ரெசிபி

பாதாம் மில்க்ஷேக் அல்லது சாக்லேட் மில்க் ஷேக் பற்றி பலமுறை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த காபி மில்க் ஷேக் மிகவும் வித்தியாசமானது. ஆனால் அசாதாரணது அல்ல. இங்கே, நாங்கள் உங்களுக்காக பேரிச்சை மற்றும் காபி மில்க் ஷேக் எவ்வாறு தயார் செய்வது என்பதைப் பற்றிய செயல்முறை குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

பேரிச்சையின் இனிப்பும் புதிதாக வறுக்கப்பட்ட காபியின் வாசனையும் ஒன்று சேரும் பொழுது ஒரு தெய்வீக பானத்தை தருகின்றது. இன்று இரவு நீங்கள் ஏதேனும் பார்ட்டி தருகின்றீர்களா. உங்களுடைய பார்ட்டிக்கு வரும் விருந்தினர்களை ஒரு முற்றிலும் வித்தியாசமான பானத்துடன் வரவேற்க விரும்புகின்றீர்களா?
நீங்கள் ஏன் இந்த காபி மில்க் ஷேக்கை முயற்சி செய்து பார்க்கக் கூடாது.

நீங்கள் காபியின் அளவை குறைந்து அதற்கு பதில் பால் சேர்த்து இதை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்கள் இதன் சுவையை அதிகம் விரும்புவார்கள். பால் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதன் மூலம் பால் குடிக்கத் தொடங்குவார்கள்.

இந்த காபி மில்க் ஷேக் செய்முறை மிகவும் எளிதானது. இதற்கு தேவைப்படும் பொருட்களும் மிக எளிதாகவே கிடைக்கின்றது. எனவே இதை மிக எளிதாக செய்து விடலாம். இதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் செய்முறையைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே தொடர்ந்து படியுங்கள்.

பரிமாறும் அளவு – 2 டம்ளர்

தயாரிப்பு நேரம் – 5 நிமிடங்கள்

சமையல் நேரம் – 12 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

1. கொட்டை இல்லா பேரிச்சை – 1 கப்

2. உடனடி காபி பவுடர் – 10 தேக்கரண்டி

3. பால் – 6 கப்

4. பச்சை ஏலக்காய் – 5-6

5. சர்க்கரை – 3 டீஸ்பூன்

6. புதிய கிரீம் – ¾ கப்

7. ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு

செயல்முறை:

1. பேரிச்சை பழங்களின் கொட்டைகளை நீக்கி அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பை ஏற்றி அதில் ஒரு கடாயை வைக்கவும். கடாயில் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். தண்ணீருடன் காபி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

2. அடுப்பில் உள்ள காபி டிகாஷனுடன் சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சர்க்கரை நன்றாக கரையும் வரை காத்திருக்கவும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து விடவும். இதை தனியே எடுத்து வைத்து சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.

3. இப்போது, மிக்ஸியில் விதையில்லாத பேரிச்சைகளை போட்டு அதனுடன் சிறிது பால் சேர்த்து நன்கு கடையவும். இதனுடன் ஐஸ் க்யூப்ஸ், காபி டிகாஷன், பால் மற்றும் புதிய கிரீம் போன்றவற்றை சேர்த்து மீண்டும் நன்கு கடையவும். மிக்ஸியில் போட்டுள்ள பொருட்கள் நன்கு கடையப்பட்டு ஒன்று சேரும் வரை கலக்கவும்.

4. ஒரு உயரமான கண்ணாடி டம்ளாரில் இந்த மில்ஷேக்கை ஊற்றி அதன் மீது சிறிது காபி டிகாஷன் விட்டு மில்க் ஷேக்கை அலங்கரிக்கவும். இப்பொழுது உங்களின் பேரிச்சை மற்றும் காபி மில்க் ஷேக் கண்ணாடி டம்ளரில் பறிமாறத் தயாராக உள்ளது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: