கோவையில் ஆண் யானை இறப்பு… ஆந்த்ராக்ஸ் நோய் காரணம்…!

கோவை காருண்யா பல்கலைக்கழகம் பின்புறம் மதுக்கரை வட்டம் வனப்பகுதியில், 25 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அந்த யானை இறந்து, 2 நாட்களுக்கு மேல் இருக்கும் எனக் கூறியது.
இந்நிலையில் வனத்துறை மருத்துவர்கள் யானையின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய இரத்த மாதிரியை சோதனை செய்துள்ளனர். இரத்த மாதிரியில் மேற்கொண்ட பரிசோதனையின்படி யானை இறந்ததற்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்புதான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோவையில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவாமல் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பு ஊசி போடும்படி கால்நடை பராமரிப்பு துறைக்கு மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்பிரமணியன் பரிந்துரைத்துள்ளனர்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: