டில்லி மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் ரொக்கமில்லா பரிமாற்றம்

புதுடில்லி: டில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் ரொக்கமில்லா பரிமாற்றம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் ரொக்கமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக டில்லி மெட்ரோ ரயில் நிலைய தலைவர் கூறியதாவது: இந்த ரயில் நிலையங்களில் பொது மக்கள் பேடிஎம் உள்ளிட்ட மொபைல் வாலட்கள் மூலம் பணம் செலுத்தலாம். ரயிலில் பயணம் செய்ய டோக்கன் வாங்கவும், ஸ்மார்ட் கார்டு வாங்க அல்லது ரீசார்ஜ் பேடிஎம், கியூஆர் கோட் மூலம் பணம் செலுத்தலாம். பேடிஎம் மூலம் : டோக்கன் கவுன்டர் அல்லது சேவை மையத்தில் கியூ ஆர் கோட் பயன்படுத்தலாம். இருப்பினும், ரொக்கம் செலுத்துபவர்களுக்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரு மையம் செயல்படும் என தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் பணம் திருப்பி அளிக்க வேண்டியிருந்தாலும் பேடிஎம் மூலம் திருப்பி அளிக்கப்படும். இது தொடர்பாக இமெயில் அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.ரோகினி கிழக்கு, ரோகினி மேற்கு ரயில் நிலையங்கள், எம்ஜி ரயில் நிலையம், மயூர் விகாஸ், நிர்மன் விகர், திலக் நகர், ஜானக்புரி மேற்கு, நொய்டா செக்டார் – 15, நேரு பிளேஸ், கைலாஸ் காலனி ரயில் நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: