திருத்தி பாடிக் கொடுத்தால் ஒலிப்பரப்ப தயார்… சபரிமலை தந்திரி அறிவிப்பு

திருவனந்தபுரம்:அவர் திருத்தி பாடிக் கொடுத்தால் மீண்டும் ஒலிப்பரப்ப தயார் என்று சபரிமலை தந்திரி கூறி உள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

கேரளா சபரிமலை அய்யப்பன் கோயிலில் வரும் 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அப்போது அய்யப்பனை தூங்க வைக்க ஹரிவராசனம் பாடல் இசைக்கப்படும். அத்துடன் நடை சாத்தப்படும்.

இந்த பாடலை பிரபல பாடகர் யேசுதாஸ் பாடியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாடல்தான் சபரிமலையில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது இந்த பாடலில் சிறு தவறு உள்ளதாக யேசுதாஸ் தெரிவித்து இருந்தார். அதாவது பாடலின் 3-வது வரியில் ‘ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்…’ என்ற வார்த்தையில் ஹரி, விமர்த்தனம் இரு வார்த்தைகளையும் தனித்தனியாக பாட வேண்டும்.

ஆனால் ‘ஹருவிமர்த்தனம்’ என்று பாடியுள்ளார் ஜேசுதாஸ். இதை அவருக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பாடச் சென்றபோது அக்கோவில் தந்திரிதான் சுட்டிக்காட்டினாராம். எனவே எனக்கு மீண்டும் ஒருமுறை இப்பாடலை பாட வாய்ப்பு கிடைத்தால் திருத்தி பாட தயாராக உள்ளேன் என்று சொல்லியிருந்தாருங்க… அதுமட்டுமின்றி சமீபத்தில் சபரிமலைக்கு சென்றபோது சன்னிதானத்தில் இப்பாடலை திருத்தி பாடினார்.

இத்தகவல் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு தெரிய வந்தது. உடன் அவர் ஹரிவராசனம் பாடலில் உள்ள தவறை யேசுதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த தவறை திருத்தி மீண்டும் அவர் பாடலை பாடினால் அதை சபரிமலையில் ஒலிபரப்ப தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: