நகைச்சுவை நடிகர் மனைவி தற்கொலை… குடும்பத்தார் மீது வழக்கு

ஐதராபாத்:பிரபல நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷ். கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இவருக்கும், திரிபுரம்பிகா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் திரிபுரம்பிகா விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். ஐதராபாத்தில் சூட்டிங்கில் இருந்த ரமேஷ் மனைவி இறந்த தகவல் கிடைத்தவுடன் விசாகப்பட்டினம் வந்தார்.

இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து ரமேஷ் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: