பாபி சிம்ஹாவின் பாம்பு சட்டை படத்துக்கு யு சான்றிதழ்!

ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்து தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா அதன்பிறகு ஹீரோவாகி விட்டார். அந்த சமயத்தில் பல கதைகளை கேட்டு செலக்ட் பண்ணி சில படங்களில் கமிட்டானார். அதில் ஒரு படம்தான் பாம்பு சட்டை. ஆதம்தாசன் இயக்கிய அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். ஆனால் வேகமாக வளர்ந்து வந்த அந்த படம் திடீரென்று பைனான்ஸ் பிரச்சினை காரணமாக மாதக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. அப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக விட்டது.அதன்காரணமாக, சென்சார் சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட பாம்பு சட்டை படத்தை நேற்று தணிக்கைக்குழுவினர் பார்த்தனர். அப்போது படத்திற்கு எந்தவொரு காட்சி, டயலாக்கிற்கும் கட் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
மேலும், பாபி சிம்ஹா நாயகனாக நடித்த சில படங்கள் அவருக்கு சரிவைக் கொடுத்து வந்தபோதும், இந்த படத்தின் வித்தியாசமான கதையம்சம் அவரது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும். அதோடு, வித்தியாசமான ஒரு செண்டிமென்ட் கதையில் உருவாகியுள்ள இந்த படம் பாபிசிம்ஹாவின் இமேஜை உயர்த்திக்காட்டும் என்கிறார்கள்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: