பில்லா 2 இயக்குநரின் படத்தில் நயன்தாரா!

நயன்தாராவின் பிறந்தநாளன்று அறம் படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இப்போது பில்லா 2 இயக்குநர் சக்ரி டோலட்டியின் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கொலையுதிர் காலம் என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம், த்ரில்லர் வகையைச் சார்ந்ததாகும். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை பாலாஜி பிலிம்ஸும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரிக்கின்றன.

வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளன்று தான் புதிய பட அறிவிப்புகள் வெளியாகும்.
ஆனால் நயன்தாராவின் பிறந்தநாள், இந்த இரு பட அறிவிப்புகளால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

113
-
0%
Rates : 1
Related videos

Leave a Reply

%d bloggers like this: