ரஜினிக்கு சொன்ன கதையில் இவர் நடிக்கிறார்… தகவல் “லீக்”

சென்னை: ரஜினிக்கு சொன்ன கதையில் இவர் நடிக்கிறார் தெரியுங்களா? என்று கோலிவுட் கோகிலாக்காக மெசேஜ் தட்டுறாங்க… என்னா விஷயம்ன்னு விசாரிச்சா…

நடிகர் அரவிந்த் சுவாமி தற்போது ஜெயம் ரவியுடன் நடித்து முடித்துள்ள படம் போகன். இதையடுத்து அவர் சதுரங்கவேட்டை 2 வில் நடித்து வருகிறார். இந்த படமும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இதை தமிழில் அரவிந்த் சுவாமி நடிக்க, போகன் இயக்குனர் லக்ஷ்மன் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் பரபரக்கின்றன.

இதை விட முக்கியமான மேட்டரு இனிமேதான்…
இந்த கதை ஏற்கனவே ரஜினியிடம் கூறப்பட்டு சில காரணங்களால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: