ருத்ரதாண்டவம் ஆடிய வர்தா: ஒரே நாளில் பாதி மீண்டு வந்துள்ள சென்னை

சென்னை: வர்தா புயலால் நிலைகுலைந்த சென்னையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் நேற்று சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும் பல இடங்களில் கனமழையும் பெய்தது.
புயலால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே தமிழக அரசு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. சென்னையில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடத் துவங்கியுள்ளன. சீரமைப்பு பணிகளில் பிற மாவட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related videos

Leave a Reply

%d bloggers like this: