ரூ. 250 கோடி மாற்ற உதவிய நகை வியாபாரிகள் கைது

புதுடில்லி: பழைய 500 , ஆயிரம் ரூ. 250 கோடி மாற்ற உதவிய தங்க நகை வியாபாரிகள் 4 பேர் டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய பணம் கொள்கை அறிவித்த நாள் முதல் பலரும் கள்ளப்பணத்தை தங்கநகைகளாக வாங்கி பதுக்கினர். பல கோடி பணம் பறிமுதல்: இது போல் கறுப்பை வெள்ளையாக்கிட முயற்சித்த நபர்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் பல கோடி பணம் மற்றும் தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் டில்லி சாந்தினிசவுக் பகுதியில் பழயை ரூ. 500, ஆயிரம் பெற்று தங்கநகைகள் வாங்கி கொடுத்துள்ளனர். ரூ. 250 கோடி வரை இவ்வாறு நகை வாங்கப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக 4 பேரை வருமான வரி துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related videos

Leave a Reply

%d bloggers like this: