வேண்டாம்… இதுக்கு மேல கிளறாதீங்க… சதீசுக்கு அன்பு கோரிக்கை

சென்னை : வேண்டாமே… இத்தோடு விட்டுங்களேன் என்று அன்பாக கோரிக்கை விடுத்தாராம் அந்த நாயகியின் அம்மா… என்ன விஷயம் என்கிறீர்களா?

 

ஒரு போட்டோதாங்க… ஒரே ஒரு போட்டோதான் காமெடி நடிகர் சதீசுடன் எடுத்தார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படம் அவரின் திருமணம் வரை கொண்டு போய்விட்டது. இதேபோல ரெமோ பட நன்றி விழா மேடையில் அந்த புகைப்பட செய்தி குறித்து மீண்டும் பேசி பரபரப்பை கிளப்பி விட்டுட்டார் சதீஷ்.

 

இதனால் தான் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, சதீஷிடம் அந்த வதந்தியை அப்படியே விட்டு விடுங்கள் மீண்டும் மீண்டும் கிளறி விட வேண்டாம்.

 

இதேபோல் பேசிக்கொண்டு இருந்தால் என் மகளின் இமேஜீக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம். என்ன சதீஷ் வேறு ஒன்றும் இல்லையே…

Related videos

Leave a Reply

%d bloggers like this: